தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

Monday, 12 January 2015

சிறந்த பெண்மணிகள் தமிழ் பெண்கள்


அன்பும் பண்பும் நிறைந்து ஒரு அரவணைப்பை தருபவள் தான் பெண்.ஆம் தமிழ் குலத்தில் பிறந்து வீரசாதனைகளையும் வாழ்கையும் வாழ்ந்து இன்று வரை வீரதிருப்பெயரை நிலைநாட்டி கொண்டிருப்பவர்கள் தான் நம் பழங்கால தமிழ் பெண்கள்.இன்றைய 19ஆம் நுற்றாண்டில் ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் கால்தடம் பதித்து சாதனை படைத்து வருகிறோம் நம் தமிழ்பெண்கள்.நாம் துவண்டுவிட கூடாது நமக்கு எற்படும் இடர்பாடுகளை கண்டு.அவற்றில் இருந்து மீட்டெழுந்து சாதனை மற்றும் புதியவாழ்க்கை பயணத்தில் அடியெடுத்து வைக்க வேண்டும்.கடமைகள் பல நமக்காக காத்திருக்கிறது.மனதில் புதியமாற்றங்களுடன் புத்துணர்ச்சியுடன் பயணிப்போம் தோழிகளே.வாழ்க்கையில் நாம் எடுக்கும் கோழைதன்மை யுடைய முடிவுகளில் மாற்றங்கள் கொண்டு வருவோம்.இதனால் நாம்மை சார்ந்த பாசமிகு உறவினர்களின்அன்பை பறிகொடுக்கமால் அவர்களுடன் இருப்போம்.நாம் நம்மை குறைந்து மதிப்பிடகூடாது தோழிகளே.பாசத்திற்கு கட்டுப்பட்டு இன்று நம் தோழிகளின் பலர் வாழ்க்கை பறிபோவதை கணகூடியாத தான் உள்ளது.காரணம் நம்மனதில் நாம் எற்படுத்தி கொள்ளும் பொய்மை செயல்பாடுதான்.முதலில் நாம்மை நாமே உணர வேண்டும் அப்பொழுது தான் மனதில் புத்துணர்ச்சி மற்றும் புது வழிமுறைகள் கிடைக்கும்.தோழிகளே நம் தோழிகள் மன கஷ்டத்தில் பரிதவிக்கும் பொழுது அவர்களுக்கு ஒரு ஆறுதல் சொல்லும் அன்பு பெண்மணிகளாக மாற வேண்டும்.
தொடரும்......

No comments:

Post a Comment