தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

Thursday, 15 January 2015

சந்தோஷத்தின் பிறப்பிடம் பெண்

அன்பான என் தமிழ் தோழிகளே அனைவருக்கும் இனிய வணக்கங்கள்

தோழிகளே நாம் ஒரு செயலில் இடுபடும் பொழுது அச்செயல்பாடுகளில் வெற்றி கிட்டும் பொழுது நமக்கு அளவிள்ள மகிழ்ச்சி அடைகிறோம்.தோழிகளே குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் முதல் பங்களிப்பு நமக்கு தான்.குடுபத்தில் ஏற்படும் ஒவ்வொரு கஷ்டங்களைவும் பொருத்து கொண்டு அவற்றிற்கு ஒரு தீர்வு கண்டு பொது வாழ்வில் மகிழ்ச்சியை காண்கிறோம்.கணவன் மனைவி என்ற பந்தங்களில் கூட ஏற்படும் மனகசப்புகளை மாற்றி சந்தோஷத்தை நிலைநாட்டுபவள் தான் மனைவி.இதே போன்று அன்னை என்னும் பெண்ணாக நம் வாழ்வியில் செயல்பாடுகளில் மாற்றங்களை கொண்டு வந்து புது மகிழ்ச்சியை இல்லரத்திற்கு மற்றும் மனதிற்கும் தருபவள்தான் பெண்.குடும்பத்தில் ஒரு நிகழ்வு நடைபெறுமானல் அதில் முழு பங்களிப்புடன் ஈடுபட்டு அதில் முழு சந்தோஷத்தை குடும்பத்திற்கு அளிப்பவள் தான் பெண்.நினைவு கூருங்கள் தோழிகளே நாம் கடந்து வந்த சந்தோஷங்களில் நம் அன்னை என்னும் பெண் தெய்வங்களில் பங்களிப்பை.தாய்மை என்னும் பாசத்தை ஒரு குழந்தைக்கு வழங்கி அக்குழந்தைக்கு மகிழ்ச்சியை தருபவள் தான் பெண்.பள்ளி முதல் நம் திருமண பந்த வாழக்கை வரையிலும் நம் செயல்பாடுகளில் சந்தோஷத்தை அளிப்பவள் தான் பெண்.அதே போன்று சகோதரத்துவத்திலும் கடைசி நாள் வரையிலும் அன்பை பறிமறி நாம் அனைவரும் ஒன்று தான் என்ற மகிழ்ச்சியை நம்மிடம் நிலைநாட்டுபவள் தான் பெண்.மொத்ததில் கடவுளாகவும் அனைத்து பெண் தோழிகளுக்கும் பாசத்தையும் அருளையும் தரும் தெய்வமாக கூட பெண் இருக்கிறாள்.
தொகுப்பு:தமிழ் அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி

No comments:

Post a Comment