தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

Sunday 25 January 2015

பாசத்தின் முதல் தெய்வம் அன்னை (கட்டுரை)

என் அனைத்து பெண் தோழிகளுக்கும் அன்னை தெங்வங்களுக்கும் இக்கட்டுரை சமர்பணம்

தோழிகளே நம் வாழ்க்கையில் பெண்ணாக பிறந்து நாம் நினைத்த செயல்களிலும் வெற்றியடைய செய்தவர்களில் முதல் தெய்வம் நம் அப்பா.அம்மா.இவர்களில் நம் மீது தனி கவனத்துடன் முழ பற்றும் கொண்டு நம்மை வழிநடத்தியவள் தான் அம்மா.அத்தகைய அம்மா நம் பழக்கங்களில் உள்ள சிறு தவறுகளையும்.பண்புகளையும் கண்டறிந்து நம்மிடையே மாற்றங்களை ஏற்படுத்திய ஒளிவிளக்கு தான் அம்மா.பெண்களை பொறுத்தமட்டிலும் மிக பாசமுடன் காணப்படுவது தந்தையிடம் தான்.ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் நம்மை முழமையாக வழிநடத்தி செல்பவள் அம்மா.தோழிகளே நம்மில் பலா் இன்று நல்லதொரு நிலையில் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கலாம்.ஆனால் நம் அன்னை தெய்வங்களை பற்றி நினைவு கூர்ந்தது உண்டா.நம் வாழ்க்கையில் ஒரு தவறுகள் நடக்கப்படும் பொழுது தான் நம் அன்னை தெங்வங்கள் கண்கலுக்கு புலப்படுவர்கள்.தோழிகளே நம் படித்தவுடன் நமது வாழ்க்கை துணைவருடன் சென்று விடுகிறோம்.ஆனால் நம் தாய் நம்மை அப்பொருட்பிற்கு செல்லும் வரை நம்மை ஒரு பசு தன் கன்றுக்குட்டியை பாதுகாப்பது போல் காத்து நம் வாழ்க்கையில் பாடங்களை கற்றுகொடுத்து மேம்படுத்தியவள் தான் தாய்.இன்றைய சூழ்நிலையில் நம்மை பெற்றெடுத்த அன்னை தெய்வங்களை மகிழ்ச்சியடைகூடியவகையில் என்ன நற்பலன்களை செய்திருக்கிறோம் யோசியுங்கள்.தோழிகளே நாமும் குடும்ப வாழ்க்கையில் ஒரு அன்னையாக செயல்படும் பொழுது தான் தெரியும் அன்னை தெங்வங்கள் நமக்கு செய்த பணிவிடைகளை பற்றி.நமக்கு ஒரு விபரிதம் என்றால் முதலில் ஆதங்கப்படுபவள் தாய்யே.தோழிகளே இவ்வுலகில் என் அன்னையார் தினம் கொண்டாடப்படுகிறது என்றால் நம்மிடையே மிக பாசமுடனும்.அரவணைப்பையும் தரும் பொருள் பெண் என்னும் அன்னையே என்பதை சுட்டி காட்டிவதே ஆகும்.தோழிகளே நாம் துணைவர் விட்டில் வாழம்  பொழுது கூட அங்கு நமக்கு ஏற்படும் மறைமுக பிரச்சனைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்பவள் அன்னையே.ஒரு விளக்கில் எரியும் சுடராக கடைசிவரை தன் மானத்தையும் பொருட்படுத்தாது தன் துணைவருக்காவும்.தன் பிள்ளைகளுக்காவும் செயல்பட்டு ஒரு தெய்வமாக விளங்குபவளே பெண்.ஒரு ஆணுக்கு தன் குடும்பத்தின் முலமாகவே உறவு பாசங்கள் பற்றி தெரியும்.அதே போன்று தான் பெண்ணுக்கு தாய்மை என்னும் பந்தத்தின் முலம் தான் பாச உறவுகளை பற்றி அறிகிறோம்.தோழிகளே தாய் என்னும் தெய்வங்களை நம் உயிரினும் மேலாக நினைப்போம்.அவர்களை நம் இறுதி நாட்கள் வரையிலும் குழந்தைகளை போன்று பாதுகாப்போம் அவர்களுக்கு பணிவிடைகள் செய்வதற்கான தருணம் அவர்களின் இறுதிநாட்களின் பொழுது உடன் இருந்து செயல்படுவதே ஆகும்.அவர்களின் இறுதி கால ஆசைகளை நம் கணவர்களின் உதவியுடனும் செய்வோம்.அன்னை என்னும் மாபெரும் தெய்வத்தினை உலகறிய செய்வோம்.
தொகுப்பு: தமிழ் அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி

1 comment:

  1. இது பிரமாதமான கட்டுரை. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி

    ReplyDelete