தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

Sunday, 11 January 2015

பெண் பாதுகாப்பு சிறப்பு தொகுப்பு

அன்பான தமிழ் தோழிகளேஅனைவருக்கும் இனிய வணக்கங்கள்

சமுதாயத்தில் பெண்கள் பாதுகாப்பு என்பதுஅனைத்து பெண் தோழிகளுக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது.பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் மற்றும் கல்லுாரி செல்லும் தோழிகள் மற்றும் அலுவலக பணிகளுக்கு செல்லும் பெண்கள் என அனைத்து தரப்பு பெண் தோழிகளும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் இதோ
1.நாம் செல்லும் இடங்களில் நடைபெறும் செயல்பாடுகளை கவனிக்கபட வேண்டும்.
2.ஒருவரிடம் கலந்துரையாடும் பொழுது அவரை பற்றியும் அவரின் செயல்பாடுகளையும் நன்கு கவனிக்க வேண்டும்.
3.நம்மை பற்றிய விபரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள கூடாது.
4.அன்றாட செயல்பாடுகளில் வித்தியாசமான மாற்றங்கள் தெரியுமானல் அவற்றை கண்கானிக்க வேண்டும்.
5.அடையாளம் தெரியாதவர்கள் பின் தொடர்ந்தால் அருகில் உள்ள இடங்களிலோ அல்லது வீட்டிற்கு தகவல் தெரியபடுத்த வேண்டும்.

6.தொலைப்பேசி எண்களை மிக நெருக்கிய நண்பர்கள் மற்றும் விட்டில் உள்ள உறவினர்களுக்கு மட்டும் பகிர்ந்தது கொள்ள வேண்டும்.
7.அடையாளம் தெரியாதவர்களின் அன்பான பேச்சில் மயங்கி விட கூடாது.
8.கல்லுரி தோழிகள் தங்கள் சக நண்பர்களுடன் பொது இடங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
9.குடும்பத்தில் ஏற்படும் வீவாதங்களின் பொழுது மிக அமைதி காக்க வேண்டும்.
10.விட்டிற்கு புதிதாக வருபவர்களிடம் அளவான பழக்கங்கள் வைத்து கொள்ள வேண்டும்.
11.பெண் குழந்தைளிடம் அடையாளம் தெரியாதவர்கள் தரும் பொருட்களை வாங்க கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
12.அதிக மக்கள் கூடும் பொது இடங்களில் பெண்கள் விலை உயர்ந்த பொருட்களையும் மற்றும் ஆபரணங்களையும் தவிர்க்க வேண்டும்.
13.வயது வந்த பெண்களோ அல்லது பெண் குழந்தைகளையோ தனிமையாக பொது இடங்களுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
14.விட்டில் தனியாக இருப்பதை முடிந்த வரையிலும் தவிர்க்க வேண்டும் அல்லது அருகில் உள்ளவர்களின் தொலைப்பேசி எண்களை வைத்து கொள்ள வேண்டும்.
15.தேவையற்ற தொலைப்பேசி எண்களுக்கு அழைப்பதோ அல்லது தொடர்ச்சியான அழைப்புகள் வருமானால் விட்டில் தெரியபடுத்த வேண்டும்.
16.விட்டில் நமக்கு எதிரான மாற்றங்கள் தெரியுமானல் மகளிர் காவல்நிலைங்களில் புகார் தெரியபடுத்த வேண்டும்.
17.பாலிய குழந்தை திருமணங்கள் நடைபெறுமானல் அவற்றை கண்டு தெரியபடுத்த வேண்டும் அல்லது அவற்றின் விளைவுகளை பற்றி இரு தரப்பிற்கும் புரிய வைக்க வேண்டும்.
18.காதல் நண்பர்களின் வசிய மாற்றங்களுக்கு மனதில் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.
19.உறவினர்களிடம் கவனமுடன் பழக வேண்டும்.தேவையற்ற உறவுகளை தவிர்க்க வேண்டும்.
20.இரவு நேர பயணங்களில் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் மற்றும் தனியாக அதிக தொலைவு செல்வதை தவிர்க்க வேண்டும்.

தொகுப்பு: தமிழ் அன்னை இணையதளம்.இது தமிழ் பெண் தோழிகளுக்கு ஒரு இளம் தோழி நடத்தும் சமுதாய விழிப்புணர்வு இணையதளம்.No comments:

Post a Comment