தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

Sunday 1 February 2015

கணவன்-மனைவி கருத்து வேறுபாடு-கட்டுரை தொகுப்பு

என் அருமையான இல்லற மற்றும் இல்லற வாழ்வில் அடியேடுத்து வைக்கும், வைக்க போகும் தமிழ் தோழிகளே தமிழ் அன்னை தளத்தின் இனிய வணக்கங்கள்

கணவன்-மனைவி என்னும் உறவுபந்தம் நம் இரு மனங்கள் ஒன்றினைந்து ஒரு குடும்பத்தையும் சமுதாயத்தையும் உருவாக்க கூடியது.நம் வாழ்க்கையின் முதல் பயணத்தை நம் குடும்ப உறவுகளான பாசமீகு பெரியவர்களின் ஆசியுடன் தொடங்கி வைத்த இப்பொருட்பில் நமக்குள் ஏன் அந்த மனகசப்பு மற்றும் கருத்து வேறுபாடு.தோழிகளே வாழ்க்கை என்பது நாம் ஒருமுறை வாழ்ந்து அதில் சாதனை படைந்து செல்ல கூடிய ஒன்றாகும்.அதில் ஏற்படும் ஒரு சில இடர்பாடுகளினால் நம் வாழ்க்கையினை நாமே கேள்வி குறியாக்கி விடுகிறோம்.தோழிகளே நமக்குள் ஆயிரம் 
பிரச்சனைகள் வந்தாலும் அவற்றில் இருந்து விடுபட நாம் மனதினை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.இன்னும் குறிப்பாக சொன்னால் நம்மில் கருத்து வேறுபாடு என்பது எழக்கூடிய ஒன்றாகும்.தோழிகளே குடும்ப வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் சந்தோகித்தல் குறை கூறுதல் என்பதை முதலில் விட்டொழிக்க வேண்டும்.நம் இல்லற வாழ்க்கை தொடக்கத்தில் இனிமையான செயல்பாடுகளுடன் தொடங்கினால் தான் நெடுங்கால வாழ்க்கையை இருதரப்பு உறவுகளிலும் இனையாக கொண்டு செல்ல முடியும்.முதலில் நமக்குள் வெளிப்படையான கருத்துகளை ஒளிவுமறைவின்றி பேசி பழகி கொள்ள வேண்டும்.கணவன்-மனைவி இல்லற வாழ்க்கை என்பது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை போன்றது.அது உடையாத வரை தெளிவாக பிம்பம் தெரியும்.உடைந்தால் பயனற்றாதாகி விடும்.அது போன்றுதான் நம் இல்லற வாழ்க்கை தோழிகளே.
இவ்வுலகில் ஆண் பெண் இருவருக்கும் கடவுள் அளித்த ஒரு வரம் அன்பான அமைதியான குடும்ப வாழ்க்கை.ஆனால் அப்படிப்பட்ட அந்த வாழ்க்கையில் நாம் அமைதியற்ற ஒரு மனநிலையுடன் இருபலாரும் தவிக்கிறோம்.இதன் விளைவுகள் என்றுபார்த்தால் விரக்தியடைந்த மனநிலையுடன் உயிரை பறிகொடுப்பது.குழந்தைகள் பரிதவிப்பது மற்றும் இருதரப்பு குடும்ப உறவினர்கள் வருத்தமடைவது போன்றவைகள் நடைபெறலாம்.
இவற்றில் இருந்து விடுபட அல்லது மன ஆறுதல் அடைய சில வழிமுறை யோசனைகள் தோழிகளின் நலனுக்காக
1.முதலில் ஒருவரை ஒருவர் தெளிவான மனநிலையுடன் புரிந்து கொள்ள வேண்டும்.
2.துணைவர் அவர்கள் ஒரு சில நேரங்களில் முரண்பட்ட கருத்தை தெரிவிக்கும் பொழுது அவற்றை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
3.தேவையற்ற சந்தேகங்கள் இருவரிடமும் எழும் பொழுது அவற்றை புரிந்து கொண்டு நிவர்த்தி செய்ய முயற்ச்சிக்க வேண்டும்.
4.சிறிய பிரச்சனைகளை பற்றி மீண்டும் மீண்டும் ஆலோசித்து பெரிய பிரச்சனையாக மாற்றி கொள்வதை தவிர்க்க வேண்டும்.
5.ஒரு செயலை செய்யும் பொழுது ஒன்று அதை விட்டு கொடுக்க வேண்டும்.அல்லது அச்செயலை பற்றி நல்லதொரு பாராட்டு ஆலோசனைகளை நம் துணைவர்களுக்கு வழங்கிட வேண்டும்.
6.கணவன் மனைவி இடையேயான தாம்பத்தியம் தொடர்பான மறைமுக பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றில் இருவரும் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
7.ஒருவரை ஒருவர் பாசமுடனும் அரவனைப்புடன் இருக்க பழகி கொள்ள வேண்டும்.குழந்தைகளை நேசிப்பதை போன்று
8.நமக்குள் ஒருவரை ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர்(பணிபுரிதல்.பொருளாதாரம்.மற்றும் சில அடிப்படைகளின் படி)வேறுபடுத்தி கொள்வதை தவிர்க்க வேண்டும்.
9.தோழிகளே நம்மீதோ அல்லது துணைவர் மற்றும் குடும்பத்தின் மீதோ மற்றவர்கள் தெரிவிக்கும் ஆதாரமற்ற கருத்துகளை ஆராய்ந்து பார்க்கமால் திடிர் முடிவுகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
10.ஒருவரை ஒருவர் மனதளவில் பாதிக்கப்படும் அளவுக்கான உரையாடல்களை தவிர்க்க வேண்டும்.
11.முடிந்த வரையிலும் வீபரீத முடிவுகளை தவிர்க்க வேண்டும்.இதனால் பாதிப்படைவது நம் இரு குடும்பத்தினர்களின் அமைதி முற்றிலும் இல்லாமல் போய்விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
12.கணவர்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அவர்களுக்கு உறுதுணையான மற்றும் தன்னம்பிக்கை தரக்கூடிய ஆலோசனைகளையும் வழஙகலாம்.
13.நம் துணைவர் குடும்ப உறவினர்கள் மீது பாசத்துடன் இருக்ககூடிய மனநிலையை உருவாக்கி கொள்ள வேண்டும்.

தோழிகளே இன்றைய கால இயந்திர வாழ்க்கையில் நம் படிப்பறிவு தோழிகள் மற்ற பொருளாதரங்களில் முன்னோறினாலும்கூட வாழ்க்கை என்னும் பாடத்தில் திறம்பட முடிவினை மேற்ற கொள்ள முடியாமல் திடீர் முடிவுகளினால் வாழ்க்கையை பரிகொடுக்கும் அவலநிலை சமுகத்தில் அரங்கேறி வருவதை நம் அன்றாட நிகழ்வுகளின் முலம் கண கூடியாதாக உள்ளது.முதலில் மனதினை அமைதிபடுத்துங்கள்.பொறுமை அடையுங்கள்.வாழக்கையில் நம் குடும்பத்தை நல்லதொரு முன்னேற்றநிலைக்கு கொண்டு செல்ல கூடிய மனநிலையை வளர்த்து கொள்ளுங்கள்.கஷ்டங்களையும் சந்தோஷமாக மாற்றி கணவன்-மனைவி உறவை வெற்றியடைய செய்யுங்கள்.தோழிகளே நம் வாழ்க்கையினை நந்தவன சோலையாக மாற்றுவதும்.பாலைவனமாகவும் மாற்றுவது நம் கையில் தான் என்பதை சிந்தித்து செயல்படுங்கள்.
தொகுப்பு: தமிழ் அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி

No comments:

Post a Comment