தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

Wednesday, 11 February 2015

மன தாழ்வு ஒரு சிறு ஆறுதல் கட்டுரை

அன்பான என் அருமை தோழிகளே நம்முடைய வாழ்வில் இன்பம் துன்பம் என இரு வேறுப்பட்ட மாற்றங்களை அன்றாட அனுபவிக்கிறோம்.அந்த இரு வேறுபாடுகளிலும் நாம் சில நேரங்களில் மன தாழ்வு என்னும் ஒரு இருள் சூழ்ந்த பகுதியல் சிக்கி பரிதவிக்கிறோம்.இதற்கான காரணங்கள் நம்மிடையே ஏற்படும் ஒருவித மன அழுத்தமே.

மன அழுத்தம் தொடங்குவதற்கான ஆரம்ப காரணிகள் என்று பார்த்தால் நம் அன்றாட வாழ்வின் செயல்பாடுகளின் போது நம்மீது ஒரு முரண்ப்பட்ட கருத்துகளை தெரிவிக்கும் பொழுது அதனை பற்றி தொடர்ச்சியான சிந்தனையில் செயல்படுவது.குடும்ப பிரச்சனைகளினால் பரிதவிப்பது.பொருளாதாரம் தொடர்பான நிகழ்வுகள் போன்ற செயல்பாடுகளினால் நம் மன அமைதியை தொலைத்து நிம்மதியற்று வாழ்கிறோம்.

தோழிகளே இன்றைய இயந்திர உலகில் நாம் ஒரு இயந்திரத்தை போன்றுதான் செயல்படவேண்டியுள்ளது.தோழிகளே நம்மில் பலர் இல்லதரசியகவோ.அலுவலக வேலை பார்ப்பவரகவோ அல்லது கல்லுரி பள்ளி பயிலும் பெண்களாக நாம் அன்றாட பொழுதை மன அழுத்துடன் வாழ்ந்து வருகிறோம்.இன்றைய காலங்களில் நம்முடைய மன குறைப்பாடுகளுக்கு ஒரு ஆறுதல் மருந்து கிடைப்பது என்பது கூட செயலற்ற ஒன்றாக உள்ளது.தோழிகளே நம் எவ்வித செயல்பாடுகளிலும் மற்றவர்களுக்கு இணையான திறமை வாய்தவர்கள்.அப்படியிருக்கும் நிலையில் நாம் மன தாழ்வு அடைந்து விடகூடாது.நாம் செல்ல வேண்டிய வாழ்க்கை பாதை தொலைவு மிக நிளமானது என்பதை நினைவில் கொள்ள மறவாதிர்கள்.தோழிகளே நம்மில் பலர் குடும்பத்தில் ஏற்படும் நெருக்கடி நிகழ்வுகளிலோ அல்லது பொருளாதார நெருக்கடியிலோ மன அழத்தம் அடைந்திருக்கலாம்இவற்றை நாம் நினைத்து கொண்டிருந்தால் முடிவுகள் கிடைத்துவிடாது.முயற்ச்சி செய்ய வேண்டும் நம்முடைய பிரச்சனைகளில் இருந்துவிடுபடுவதற்கான வழிமுறைகளை தேடி

தோழிகளே நாம் முதலில் நம் மனதினை புரிந்து கொள்ளவது மட்டும் இன்றி நாம் எவ்வித சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.மன தாழ்வுகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியடைய வேண்டும்.உலகை வளைத்து வில்லக்க கூடிய ஆற்றல் படைத்த நம் பெண் குலம் ஏன் மன தாழ்வு என்னும் இருளில் சிக்கி பரிதவிக்க வேண்டும்.தோழிகளே தாழ்வு என்பதின் முலம் நாமே நம் முன்னேற்ற பாதையை சிரற்ற பாதையாக மாற்றி விடக்கூடாது.தோழிகளே கிடைத்த வாழ்க்கை நல்லதொரு வாழ்க்கையே என்னும் மனநிலையுடன் வாழ பழகி கொள்ள வேண்டும்.அதனை நினைத்து மனகவலையடைந்தால் நாமே நம்முடைய எதிர்காலத்தை தொலைத்தாகி விடும்.வாழ்க்கையில் எத்தனை வருடங்கள் தான் நம்முடைய கஷ்டங்களை நினைத்து மனதளவில் அழது கொண்டிருக்க வேண்டும்.தோழிகளே நம் பெண் சமுதாயத்தில் நம்மை நாமே கருத்து வேறுபாடு கொள்வதை முற்றிலும் விட்டொழிக்க வேண்டும்.
மன அழத்தில் இருந்து விடுபட சில யோசனைகள்
1.பிரச்சனைகளுக்கான முதல் காரணிகளை கண்டறிய வேண்டும்.
2.நான் வேறு நி வேறு என்றும்.உயர்தவர் தாழ்ந்தவர் என தாழ்வு ஏற்படுத்தி கொள்வதை தவிர்க்க பாருங்கள்.
3.மன அழுத்தம் அடைந்தால் நம் குழந்தைகள் மற்றும் சொந்தங்களை பற்றியும் நினைத்து கொள்ளுங்கள்.
4.மனதினை ஒருநிலைபடுத்தி கொண்டு அமைதியடைய முயற்ச்சிக்க பாருங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே அதை நாம் சில அடிப்படையற்ற செயல்பாடுகளினால் தொலைத்து விடக்கூடாது.என்னால் சாதிக்க முடியும் என்று நினையுங்கள் முடியாது என்று இருந்து விடதீர்கள்.
தொகுப்பு: தமிழ் அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி

No comments:

Post a Comment