தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

Sunday, 8 March 2015

இணையதள குற்றங்கள்-சீரழியும் பெண்கள் சமுதாயம்

அன்பான தமிழ் தோழிகளே

வளர்ந்து வரும் உலகில் அனைத்து துறைகளிலும் சிறப்பான இடத்தினை பெற்றுவரும் பெண்களுக்கு இன்றைய இணையதளங்கள் ஒரு அச்சுறுத்தலாக  உள்ளது.இன்றைய படித்த பெண்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் இணையதளங்கள் என்பது இன்றியாமையாத ஒன்றாக உள்ளது.அப்படிபட்ட அந்த இணையதளங்களில் பெண்களுக்கு எதிரான ஆபாச படங்கள் மற்றும் ஒருவரை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் என அதிகம் காணக்கூடியதாக உள்ளது.இன்றைய கால மக்களின் அதிக பயன்பாட்டில் இருப்பது இணையதளங்கள்.இவற்றில் கல்லுரி.பள்ளி பயிலும் வருங்கால இளைய சமுதாயங்களும் இணையதளங்களை பயன்படுத்துவது குறிப்பிடதக்கது.

தோழிகளே மற்ற வளர்ந்த நாடுகளில் பெண்கள் தொடர்பான ஆபாசபடங்கள் மற்றும் வீடியோகாட்சிகள் அடங்கிய இணையதளங்களை கட்டுபடுத்திவிடுகின்றனர்.ஆனால் வளரும் நாடுகளில் மட்டும் பெண்களை இழிவுபடுத்தகூடிய இணையதளங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து தான் வருகிறது.ஆனால் இவற்றை கட்டுபடுத்துவது கிடையாது.இணையதள குற்றங்கள் முதலில் தொடங்குவது காதல் பழக்கங்கள்.பெண்களை வசிகபடுத்துதல் மற்றும் பல.தோழிகளே இன்றைய கால பழக்கங்கள் மற்றும் காலச்சர சிரழிவுகள் தான் நாம் பெண்களை வித்தியாசமான நோக்கத்தில் மானபங்கம் செய்து வருகிறது இணையதளங்கள் முலமாக.காதல் என்னும் பழக்கங்களில் தன்னை நம்பிய பெண்களை அவர்களுக்கு தெரியமால் ஆபாசகாட்சிகள் பிடித்து இணையதளங்களில் பரப்பி வருகிறது ஒரு சில மனிதபிமானம் அற்ற ஆண் தோழர்கள்.மேலும் இந்த காதல் வலையில் சிக்கிய பெண்கள் நம்பிக்கையற்ற இளைஞர்களிடம் தங்களின் ஆபாசகாட்சிகள் முலம் அவர்களின் கட்டுபாட்டில் சென்று தங்களின் வாழ்க்கையை முற்றிலும் தொலைத்து விடுகின்றனர்.குறிப்பாக இந்நிகழ்வுகளில் கல்லுரி மற்றும் பள்ளி பயிலும் ஒன்றும் அறிய பெண்குழந்தைகளும் சிக்கி கொள்கின்றனர்.இதை தவிர இளம் வயதில் பணிபுரியும் இளம்பெண்களும் சிக்கி கொள்கின்றனர்.

இன்றைய இணையதளங்களில் ஆபாசகாட்சிகள் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்று பார்த்தால் பெண்கள் இது தொடர்பான நிகழ்வுகளில் விழிப்புணர்வு இல்லமால் இருப்பதே ஆகும்.கல்லுரி பயிலும் தோழிகளே நாம் இணையதளங்கள் தொடர்பான படிப்பினையும் அது தொடர்பான தொழில்நுட்பகளை அறிந்திருக்கிறோம்.எனவே நம் பெண்களின் ஆபாச காட்சிகள் அடங்கிய இணையதளங்களை முடக்குவதற்கான முயறச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும் இல்லதர பெண்களையும்.பணிபுரியும் அலுவலக பெண்களையும் ஆபாச பாடங்களாக சித்தரித்து இணையதளங்களில் பரப்புவதும் அறங்கேறிவருகிறது.இவ்வறான நிகழ்வுகளில் ஒன்றும் அறிய இளம் பெண்கள் மற்றும் குடும்ப பெண்கள் வீபரித முடிவுகளுக்கு செல்லும் நிலை சமுதாயத்தில் அறங்கேறி வருவதை நாள்தோறும் நாளிதழ்கள் முலம் காண்கிறோம்.மேலும் ஒரு சில பெண்கள் இந்நிகழ்வுகளினால் மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டம் (பணம் கொடுப்பது).போன்றவகைளும் நடைபெறுகிறது.ஒருவருக்கு தெரியாமல் அவரை பற்றி எடுக்கும் ஆபாசகாட்சிகளை இணைதளங்களில் பரப்புவதனால் அதை காண்பவர்கள் அந்த பெண்களிடமோ அல்லது குடும்ப நண்பர்களுக்கு தெரியபடுத்தும் பொழுது பாதிப்படைந்த பெண்ணின் குடும்ப வாழ்க்கையில் பாதிப்படைகிறது.

தோழிகளே இன்றைய காலத்தில் நம் பயன்பாட்டில் கையடக்க அதிநவின தொலைப்பேசி போன்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.அவற்றில் இணையதளங்கள் பயன்படுத்தும் வசதிகளும் அடங்கியிருப்பதால் இது போன்ற குற்றசெயல்களில் ஈடுபடுவர்களுக்கு எளிமையான ஒன்றாக அமைகிறது.தோழிகளே இணையதளங்களில் தவறுகள் ஏற்படுவதை குறைப்பதற்கு நாம் விழிப்புணர்வை அனைத்து தரப்பு பெண்களுக்கும் குறிப்பாக கிராம புற படிப்பறிவு அற்ற பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

இணையதள குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்ள சில வழிமுறை யோசனைகள் தோழிகளுக்காக
1.கல்லுரி .பள்ளி பயிலும் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது உடல் முழுவதும் முடிமறைக்ககூடிய ஆடைகளை அணியுங்கள்.
2.காதல் என்னும் மாயபோர்வையில் சிக்கிய இளைஞர்களிடமோ அல்லது ஆண்களிடமோ நாம் தனி பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.அவர்களிடம் கட்டுபாட்டுடன் இருப்பதற்கான மனதினை வளர்த்து கொள்ள வேண்டும்.
3.கிராமப்புறங்களில் படிப்பறிவு அற்றவர்களிடம் படித்த தோழிகள் இது தொடர்பான பிரச்சனைகளில் தாற்காத்து கொள்ள கூடிய வழிமுறைகளை கூறுங்கள்.
4.இணையதளங்களில் நமக்கு தெரிந்தவர்களின் ஆபாசகாட்சிகள் இருப்பதை அறிந்தால் அது தொடர்பாக காவல் நிலையங்களில் தெரியபடுத்தி அக்காட்சிகளை படங்களை நீக்க முயற்ச்சியுங்கள்.
5.பெண்கள் படிக்ககூடிய பள்ளி.கல்லுரிகளில் இது தொடர்பான பிரச்சனைகளில் தாற்காத்து கொள்ளகூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தலாம்.
6.பொது இடங்கள்.பொது கழிப்பிடங்கள்.உடை மாற்றும் அறைகளில்.மற்றும் அதிகம் பழக்கமற்ற நண்பர்களுடன் தங்கும் பொழுது சுற்றும் முற்றும் கவனிக்க வேண்டும்.
7.பொது இடங்கள்.பூங்கா.கடற்கரை மற்றும் சில இடங்களில் தோழிகள் தங்கள் நண்பர்களுடன் இருக்கும் பொழுது உங்களை சுற்றி சந்தேகபடக்கூடிய நபர்கள் இருக்கிறர்களா எனவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.
8.விழா காலங்களில் மற்றும் இரவு பயணங்களின் பொழுது கவனமுடன் இருக்க வேண்டும்.இரவு நேர விடுதிகளில் தங்குவதை தவிர்க்கவும்.
9.குழந்தைகள் பயன்பாட்டில் உள்ள இணையதள பயன்பாட்டு பொருள்களை தங்களின் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும்.அவர்களின் செயல்பாடுகளை கவனிக்கவும்.
10.பெண்கள் முடிந்த வரையிலும் தங்களின் புகைப்படங்களை இணையதளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க பாருங்கள்.
11.இணையதளங்களில் ஆபாச காட்சி படங்கள் தங்களை பற்றி இருந்தால் அவற்றை நீக்க முயற்ச்சியுங்கள்.வீபரித முடிவுகளை மேற்கொள்வதை தவிர்க்கபாருங்கள்.பெற்றோரிடம் மறைமுகமாக தெரியபடுத்துங்கள்.
12.சந்தேகத்திற்குரிய நபர் இது தொடர்பான படங்களை இணையதளங்களில் பரப்புகிறார் என்றால் பெண்கள் உடனடியாக அவர்களை புகார் செய்யுங்கள்.
13.இது தொடர்பான பிரச்சனைகளில் சிக்கிய பெண்களை வெறுக்காதீர்கள்.அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அரவணைப்புடன் இருக்க முயற்ச்சியுங்கள்.நடந்த உண்மைகளை பற்றி புரிந்து கொள்ளுங்கள்.
14.பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் மற்றும்  அவர்களின் நடவடிக்கைகளை பற்றி தனி கவனம் செலுத்தி கவனித்து வர வேண்டும்.
அன்பான தோழர்களே பெண்களே என்பவர்கள் தெய்வங்களுக்கு ஓப்பானவர்கள்.நமது குடும்பகளில் நமது உடன்பிறந்தவர்கள் பெண்கள் என்பதை சிந்தியுங்கள்.பெண்களும் இவ்வுலகில் ஆண்களை போன்று வாழ பிறந்தவர்கள் தான்.பெண்களை மதிக்க பழகுங்கள்.அவர்களை அநாகரீக முறைகளில் சித்தரிக்க கூடிய வகையிலான படங்களை பரப்புவதை தடுக்க முயற்ச்சியுங்கள்.பரப்பவும் செய்யாதீர்கள்.

அன்பான ஆண் மற்றும் பெண் நண்பர்களே தங்களை இணையதளத்தின் சார்பாக கேட்டுகொள்கிறோம்.தயவு செய்து பெண்களை தவறான முறைகளில் படம் படிப்பதை தவிர்க்க பாருங்கள்.பெண்கள் நாட்டின் வீட்டின் கண்கள்.அப்படிபட்ட பெண்களை தவறான முறைகளில் அவர்களின் வாழ்க்கை பாதிப்படைய கூடிய வகையிலான படங்களை இணையதளங்களில் பரப்பி பெண் சமுதாயத்தை இழிவுபடுத்துவதை தடுக்க முயற்ச்சி செய்யுங்கள்.ஒரு நாட்டில் சிறப்பான சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் பெண்களை இழிவுபடுத்துவது தொடர்பான குற்ற செயல்களை தடுப்பதன் முலமே புதிய மறுமலர்ச்சி சமுதாயத்தை உருவாக்கலாம்.தொழில்நுட்ப வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சிக்கும் தனி நபர் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டுமே தவிர இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் புரிவதற்கு பயனபடுத்த கூடாது என உறுதிமொழி மேற்கொள்வோம்.
தொகுப்பு:தமிழ் அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி


No comments:

Post a Comment