தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

Saturday, 21 March 2015

பாதுகாப்போம் பெண்களை விழிப்புணர்வு கட்டுரை தொகுப்பு

அன்பான தமிழ் தோழிகளே
 வளர்ந்து வரும் நாகரீக உலகில் ஆண் பெண் என்ற வித்தயாசங்கள் மாறி ஒரே சமத்துவம் என்னும் கொள்கையுடன் வாழும் இந்த நாவ நாகரீக சமுதாயத்தில் நம் பெண் இனம் தற்சமய காலங்களில் அழிக்கப்பட்டு வருவதையும் அவர்களின் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்படுவதையும் கண்டு வருகிறோம் தோழிகளே.இந்த நிகழ்வுகள் ஏற்படுவதற்கான துமவ் காரணம் என்று பார்த்தால் அது பெண்சிசு கொலை மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை போன்ற நிகழ்வுகளே .

தோழிகளே தற்சமய காலங்களில் நம் பெண் இனத்திற்கு எதிரான சம்பவங்கள் அறங்கேறி வருகிறது.ஒரு குடும்பத்தில் இருபாலரின் முழு விருப்பமுடன் நடைபெறும் திருமணபந்த வாழ்க்கையின் இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடு.மற்ற குடும்ப ரீதியான பிரச்சனைகளை மையபடுத்தி நம் பெண்களுக்கு எதிராக அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படுகிறது.இவற்றின் முலம் தற்கொலைமுயற்ச்சி(குடும்பத்துடன் முயல்வது) கணவருடன் தனியாக பிரிந்து வாழும் முடிவுகள்.தேவையற்ற பழக்கங்கள் போன்றவற்றிற்கு ஆளாகும் சூழ்நிலைக்கு நம் தோழிகள் தள்ளப்படுகின்றனர்.இன்றைய சமுதாயத்தில் நம் பெண்களின் வாழ்க்கை நெருப்பின் எரியும் விறகுக்கு இணையாக சென்றுவிட்டது.தோழிகளே நம் பெண்களின் கல்வி வளர்ச்சி தற்சமய காலங்களில் நல்லதொரு முன்னேற்ற நிலையை அடைந்துள்ளது.இருப்பினும் இவற்றில் திருமணபந்த வாழ்க்கையின் இடைப்பட்ட பகுதியில் கருத்து வேறுபாடு காரணமாக தங்களின் இல்லற வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.இன்னும் குறிப்பிடும்படி சொன்னால் நல்லதொருவாழ்க்கை துணைவரை தேர்ந்தெடுப்பது.குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது தொடர்பான மனபக்குவத்தை வளர்த்து கொள்வது கிடையாது இன்றைய படிப்பறிவு தோழிகள்.இவற்றை தங்களின் குடும்பகளின் சூழ்நிலைகளை புரிந்து கொள்வதன் முலம் மாற்றிகொள்ளலாம்.தோழிகளே நம்மில் பலர் நம் பெண் இனத்திற்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளுக்கு குரல் கொடுக்கும் மனநிலைபடைத்தவர்கள் எத்தனை பேர் சிந்தியுங்கள்.

இன்றைய தினம் கருகலைப்பு.பெண்சிசுகொலை போன்ற பெண்களுக்கு எதிரான கொடிய நிகழ்வுகள் சமுதாயத்தில் மறைமுகமாக நடைபெறுகிறது.இது தொடர்பான விழிப்புணர்வை அரசு மற்றும் மகளிர் நல தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.இருந்த போதிலும் இன்றைய பெண்களுக்கு குடும்ப அங்கத்தினரின் துண்டுதலின் முயற்ச்சியில் கருகலைப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது.இதன் தாக்கம் பெண் இனத்தின் வளர்ச்சிக்கு எற்படும் தடைக்கல்.தோழிகளே நம் பெண்இனம் இல்லையேல் உலகவியல் என்பது கிடையாது.அப்படிபட்ட சூழ்நிலையில் இது போன்ற நிகழ்வுகளுக்கு உடன்பட்டு செல்ல கூடாது.நாமே நம் பெண் இனத்திற்கு எதிராக செயல்பாடுவதை தவிர்த்து பெண்களை முன்னேற்ற வளர்ச்சிபாதைக்கு கொண்டு செல்ல முயற்ச்சிக்க வேண்டும்.ஒரு குடும்பத்தில் பெண்குழந்தைகளின் சிறப்பான வளர்ச்சியே வருங்கால சமுதாயத்தின் அஸ்திவாரம் என்பதை சிந்தித்து பெண்சிசு கொலை.பெண்களை வன்கொடுமைபடுத்துவதை தவிர்க்க கூடிய மனநிலையும். அது தொடர்பான விழிப்புணர்வையும் ஆண் பெண் இருபாலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பாலிய தொடர்பான பிரச்சனைகளினால் நம் பெண் சமுதாயம் சிக்கி பரிதவிக்கிறது.ஒரு குடும்பத்தில் ஆண் தோழரிகளின் சிறப்பான வழி நடத்துதல். மற்றும் பெண்களை மதிக்ககூடிய பண்புகளை பெற்றுள்ளார் என்றால் அக்குடும்பம் சமுதாயத்தில் சிறப்பான குடும்பமாக இருக்கும்.

பெண்களுக்கான மரியாதை மற்றும் பாதுகாப்பு தரக்கூடிய வழிமுறைகள்
1. பெண்களை மதிக்கவும் ஆண்களை போன்று அவர்களையும் சம உரிமையுடன் வழிநடத்த கூடிய மனநிலையை வளர்த்து கொள்ள வேண்டும்.
2.பெண்சிசுகொலை அல்லது கருகலைப்பை தடுக்ககூடிய முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் மேலும் அது தொடர்பான விளைவுகளை பற்றி பெண்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
3.பெண்களின் மீது நடத்தபடும் தாக்குதல்.பாலிய கொடுமை வரதட்சனை கொடுமை போன்றவற்றில் இருந்து தற்காத்து கொள்ளகூடிய சட்ட ஆலோசனைகளை பற்றி பெண்களில் தெரிந்து கொள்ளவேண்டும்.
4.சிறு பெண்குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குழந்தை திருமணங்களையும் கட்டாய திருமணங்களையும் தவிர்க்க வேண்டும்.
5.பொது இடங்களிலும் வீடுகளிலும் அலுவலகங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
6.தேவையற்ற முடிவுகளை(தற்கொலை முயற்ச்சி.கணவரை பிரிதல்.தாகாத பழக்கங்களின் உறவுகள்) போன்றவற்றின் பின்விளைவுகளை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.அவற்றில் இருந்து மீளக்கூடிய மனநிலையை வளர்த்து கொள்ள வேண்டும்.
7.தனிப்பட்ட முறைகளில் ஆதாரவு இன்றி பரிதவிக்கும் பெண்களுக்கு அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு உதவ வேண்டும்.
8.பெண்குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பெண்களின் உயர்கல்வி தொடர்பான பெற்றோர்கள் நல்ல முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்
9.பெற்றோர்கள் தங்களின் பெண்குழந்தைகளுக்கு மற்றும் இளம்பெண்களுக்கும் இன்றைய கால சூழ்நிலைகளை பற்றியும் அவற்றில் இருந்து எவ்வாறு வாழ்ககையை நல்வழியில் வழிநடத்திசெல்லகூடிய அணுகுமுறைகளை பற்றி அவ்வப்பொழது தனிப்பட்ட நேரங்களில் அவர்களுக்கு எடுத்துகூறவேண்டும்.

அன்பான தோழர்களே தோழிகளே சமுதாயத்தில் பெண்களும் சுதந்திரமான மற்றும் பாதுகாப்புடன் வாழ நாம் அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும்.இன்றைய சமுதாயத்தில் முன்னேற்றம் அடைய பெண்களும் முக்கிய பங்காற்றும் நிலையில் அவர்களையும் அடிமை கோட்பாடில் இருந்து விடுவித்து சம உரிமை அதிகாரத்துடன் வாழ அனைவரும் ஒன்றினைவோம்.நாட்டில் பெண்குழந்கைகளின் வளர்ச்சியை அதிகரிப்போம்.வருங்கால பெண் சமுதாயத்தை மறுமலர்ச்சி அடைய செய்வோம்.
 தொகுப்பு தமிழ்அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி

No comments:

Post a Comment