தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

Saturday, 4 April 2015

திருமணங்களும் அவற்றின் பின்னனியும் (விழிப்புணர்வு தொகுப்பு)

அன்பான தமிழ் தோழிகளே இனிய வணக்கம்
 பெண்ணாக பிறந்து இவ்வுலகில் தன் வாழ்க்கையை வாழ்ந்து நிறைவடைய செய்வதற்குள எத்தனை மாற்றங்கள் நம் பெண்கள் வாழ்க்கையில்.இன்றைய கால நம் இளம்பெண் தோழிகள் தங்கள் வாழக்கையை தேர்தெடுப்பதில் தங்களில் முழுவிருப்பமற்ற ஒரு மனநிலையுடன் வாழ்ந்துவருகின்றனர்.

தோழிகளே நம்மில் பலர் நல்லதொரு மனநிலை மற்றும் படிப்பறிவு பெற்றிருந்தும் தங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற துனைவர் அமைக்கலாம் என்ற  மனநிலையுடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு விருப்பமற்ற திருமண வாழ்க்கையில் அடியேடுத்தும் வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதே போன்று காதல் திருமணங்களிலும் நம் தோழிகள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டு வாழ்க்கையை தொலைத்துவிடுகிறோம். 

வளர்ந்து வரும் உலகில் பெண்களின் வாழ்க்கை என்பது ஒரு சாதரான ஒன்றாக சென்றுவிட்டது.நம் பெண்களின் வருங்கால வாழ்க்கை துணைவர் நம்மை பற்றி புரிந்து கொள்ள கூடிய வகையிலும் அவருடைய பழக்கங்களையும் அவரை பற்றி முழுவிபரங்களையும் அறியாமால் இன்றைய கால திருமணங்களை நடைபெருகிறது.இதில் குறிப்பிடும் தகவல் என்னவென்றால் எதிர்கால குடும்ப வாழ்க்கையில் பெண்களை பாதுகாக்ககூடிய திட்டங்கள் வகுப்பது கிடையாது இன்றைய கால திருமணங்கள்.

ஒரு பெண்ணுகு திருமணம் நடைபெறும் பொழுது அப்பெண்ணின் முழுவிருப்பத்தின் அடிப்படையிலேயே திருமணம் நடைபெற வேண்டும்.மேலும் அப்பெண்செல்லகூடிய குடும்பத்தில் அப்பெண்ணுக்கான வருங்கால வாழ்க்கை பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளில் எவ்வாறான உத்திரவாதம் அளிக்கப்படுகிறது என்று பெண் வீட்டொர் சிந்திக்க வேண்டும்.இன்றைய காலத்தில் பொருளாதாரம் மற்றும் அந்தஸ்து போன்றவற்றின் அடிப்படையில் ஏழ்மை குடும்ப பெண்கள் உயர் வகுப்பு குடும்பங்களில் அவர்களுக்கு நடைபெறும் விருப்பமற்ற திருமணங்களால் வன்கொடுமைக்கு(வரதட்சனை) ஆளாவதை கண்கிறோம் சமுதாயத்தில்.

பெண்களின் திருமண வயது 18 என இருக்கும் நிலையில் அவர்களுக்கு  குறைவான வயதில் திருமணங்கள் நடைபெறும் பொழுது அப்பெண்கள் தெளிவான மனநிலையுடனும் முழுஉடல் தகுதியினையுடன் தங்களின் எதிர்கால குடும்பத்தை வழிநடத்தி செல்லக்கூடிய அணுகுமுறைகளை பற்றி அறிந்திருக்கின்றனரா என் பெண்ணின் பெற்றோர் புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.குறைந்தபட்சம் ஒருபெண்ணுக்கும் ஆணுக்கும் வயது வித்தியாசம் என்பது 4 முதல் 6 வருடங்கள் வரை இருக்கலாம்.

இன்றைய காலத்தில் நம் தோழிகள் தாங்கள் விரும்பியவருடன் வாழ்வதற்கான காதல் திருமணங்களை பெற்றோர்கள் ஏற்று கொள்வது கிடையாது.இதன் முலம் நம் தோழிகள் வீபரிதியான முடிவுகளை மேற்கொள்ள கூடிய சூழ்நிலைக்கு தள்ளபடுகின்றனர்.மேலும் தாங்கள் விரும்பியவருடன் வாழ மறுக்கபடுவதன் முலம் விருப்பமற்ற வாழ்க்கையில் ஒருமி்த்த மனநிலையுடன் வாழ்கின்றனர்.தோழிகளே நமது வாழ்க்கை சிறப்பானதாக அமைப்பதில் பெற்றோரின் முழு ஒத்துழைப்பு என்பது அவசியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.தோழிகளே நமக்கான திருமண நிகழ்வுகள் நடைபெறுகிறது என்றால் நம்முடைய முழு விருப்பங்களை பற்றி பெற்றோரிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.இவற்றை தவிர்த்து நாம் தனிப்பட்ட முடிவுகளை மேற்கொள்வதன் முலம் நல்லதொரு வாழ்க்கையினை பெற்றிட முடியாது.காரணம் குடும்பவாழ்கையின் ஒருகட்டத்தில் நாம் பரிதவிக்கும் பொழுது நம்மை மிட்டெடுக்க குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பு என்பது மிக அவசியம் தோழிகளே.

பெற்றோர்களும் தங்களின் பெண்குழந்தைகளின் விருப்பங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் வாழ்க்கைக்கு பொருத்தமான துணைவர் மற்றும் வாழக்கூடிய குடும்பம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.மேலும் பெண் வாழக்கூடிய குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.ஆனால் இன்றைய பெற்றோர்கள் சிலர் ஆராய்வது கிடையாது.அன்பான தோழிகளே இன்றைய காலத்தில் நமக்கு நடைபெறும் திருமணங்களில் நகை.சொத்து.பணம் போன்றவற்றின் அடிப்படையில் வாழ்கை அமைக்கப்படுகிறது.தோழிகளே நாம் ஏமாற்றபடகூடாது இது தொடர்பான நிகழ்வுகளில்.மேலும் நமது பயன்பாட்டிற்கு நம் வீட்டோர் அளிக்கும் நகை.பணம் போன்றவை நம்மை ஒரு சில சமயங்களில் மனவருத்தமடையகூடிய சூழ்நிலைக்கு தள்ளபடுவதை பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.எனவே நமது பெற்றோர்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.தோழிகளே நமக்கு தேர்தெடுக்கப்பட்ட துணைவரை பற்றி நன்கு ஆராய்ந்து அவரின் பழக்கங்கள்.இரு குடும்ப உறவுகளிடமும் பற்று உடையாவராகவும் பொருளாதாரம்(நகை.பணம்.சொத்து) போன்றவற்றில் ஆசையற்றவராக உள்ளவர என கண்டறிந்து வாழ்க்கையில் அடியேடுத்து வையுங்கள் தோழிகளே.வாழ்க்கை என்பது ஒருமுறைதான் என்பதை சிந்தித்து அதை சிறப்பானதாக அமைத்து வெற்றியடை வேண்டும் அன்பான தமிழ் தோழிகளே
தொகுப்பு தமிழ் அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி

No comments:

Post a Comment