தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

Sunday, 31 May 2015

பெண்களை சமுதாயத்தில் தனிமைபடு்த்தி பார்த்தல் விழிப்புணர்வு தொகுப்பு


அன்பான தமிழ் தோழிகளே

ஒரு பெண் வாழ்க்கையின் முதற்பகுதியில் தன் பெற்றோருடனும் வாழ்க்கையின் பிற்பகுதியில் தான் தேர்தெடுத்த வாழ்க்கை துணையுடன் வாழ்கிறாள்.இவற்றில் தன் வாழ்க்கையின் முதற்பகுதியில் மிகுந்த பாசத்தடன் தன் பிற்ந்த விட்டில் வாழும் பெண் தான் செல்ல விருக்கும் புகுந்த விட்டின் நிலவும் சூழ்நிலைகளை பற்றி தெளிவான நிலையில் புரிந்து கொள்ளமால் ஒரு குறிப்பிட்ட நிலையில் நாம் மேற்கொள்ளும் முடிவுகள் நம்மை தனிமைபடுத்தி விடுகின்றன.

தோழிகளே வாழ்க்கையின் திருமணபந்தத்தின் பின்பு கணவனை இழந்தோ அல்லது விவகாரத்து போன்ற பிரச்சனைகளினால் நம் பெண்குலம் தனிமைபடுத்தபடுகிறது.பெண்ணாக பிறந்த நாம் இச்சமுதாயத்தில் எதிர்கொள்ள கூடிய ஒரு மிக பெரிய சவால் நம்மை தனிமைபடுத்தல்.தோழிகளே ஒரு பெண் கணவனை இழந்துவிட்டால் வாழ்க்கை முற்றிலும் இழந்துவிட்டது என்று நினைத்து விட வேண்டாம் தோழிகளே.குடுபத்தில் ஆண் சகோதரர்கள் புரிந்து கொண்டால் நம்மை தனிமைபடுத்தல் என்பது குறையும்.அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முயற்ச்சிக்க வேண்டும்.இன்றைய இயந்திர வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத விபத்துக்கள் மற்ற குடும்ப ரீதியான நிகழ்வுகளால் நம் வாழ்கை பறிபோகுகிறது.ஆனால் சில பெண்களின் வாழ்க்கையின் நம்மை அறிந்தே பறிபோவதை நம் கண் முன் நடைபெறும் சம்பவங்களின் கண்கிறோம்.

தோழிகளே ஒரு பெண் தன் கணவனை இழந்து தனிமைபடுத்தும் பெர்ழுது அவளை ஆதரிப்பதை விடுத்து உதசினம் படுத்தி பார்பதிலேயே இச்சமுதாயத்தின் செயல்பாடுகள் உள்ளதை நாம் காண்கிறோம்.தன் குழந்தைகளுடன் அன்றாட பொழுதை ஒவ்வொரு சாவல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருபவள் தான் சாதனை பெண்.இன்றைய சூழ்நிலையில் பெண்களின் மனபக்குவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களை வெறுத்து ஒதுக்குவதை தவிர்த்து அப்பெண்களின் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்ற வேண்டும்.இன்றைய நிலையில் பொருளாதரத்தில் பின்தாக்கிய பெண்கள் இவற்றில் பாதிப்படைகின்றனர்.இன்றைய தினம் சமுதாயத்தில் கைவிடப்பட்ட பெண்கள் ஏராளம்.அவற்றை ஒவ்வொரு நாளும் கண்டுகொண்டுதான் செல்கிறோம.தோழிகளே பெண்களை பாதுகாக்க சட்டங்கள் பல அரசாங்கள் இயற்றியுள்ளன.இருந்த போதிலும் பெண்கள் தனிமைபடுத்தல் என்பது அறங்கேறி தான் விடுகிறது.

தோழிகளே பெண்களை பொறுத்தமட்டிலும் தன்மானத்துடன் (அவமரியாதை அற்ற வாழ்க்கை) வாழ வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.தோழிகளே நம்மில் பலர் நல்ல கல்வி அறிவினை பெற்றும் சிலர் அமைதியற்ற மனநிலையுடன் முடிவுகளை மேற்கொள்கிறோம்.பெண்களை பற்றிய தெளிவான மனநிலையை அனைத்து குடுபத்தின் அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மிகசிரமத்தில் இருக்கும் தோழியர்களுக்கு உதவும் சில வழிமுறைகள்
1.ஆதாரவற்ற பெண்களின் தற்சமய நிலைப்படை புரிந்து அவர்களுக்கான மன அமைதிதரக்கூடிய யோசனைகளை கூறலாம.
2ஆதாரவற்ற பெண்களின் பொருளாதார பிரச்சனைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வழிமுறைகளை எடுத்துரைக்கலாம்.
3.குடும்ப அங்கத்தினர்கள் பரிதவிக்ககூடிய பெண்ணுக்கு அவற்றில் இருந்து எவ்வாறு மீள்வது தொடர்பான கருத்துகளை கூறலாம.மேலும் சூழ்நிலை மாற்றங்களை புரிந்து கொண்டு பெண்களின் மாறுவாழ்வை பற்றிய யோசனைகளை எடுத்துரைக்கலாம்.
4.தன்னம்பிக்கை.மன ஆறுதல் போன்றவற்றை கூறி அவர்களை நல்ல தெளிவான சிந்தனைக்கு மாற்றலாம்.
5.ஆதாரவற்ற பெண்கள் என்றால் அவர்களிடம் சகோரத்துவத்துடன் பழக வேண்டும்.

தோழிகளே இவ்வுலகில் அனைவரும் உடன்பிறப்புகளுடனும் சொந்தங்களுடனும் பிறந்த நம் பெண்கள் பரிதவிக்கும் பொழுது மட்டும் ஏன் உதவ முன்வருவதில்லை.காரணம் நாம் நம்மை பற்றி தெளிவாக புரிந்து கொள்ளமால் இருப்பதே ஆகும்.நாமும் சாதிக்க பிறந்தவர்கள் நம்மால் தனியாக சிறப்பான வாழ்க்கை வாழமுடியும்.தோழர்களே தோழிகளே பெண்கள் நம் வாழ்க்கையின் பொக்கிஷம் போன்று அவர்களை நல்ல மனநிலையுடனும்.சிறப்பாக வாழவைக்க நாம் கடமைபட்டுள்ளோம் என்பதை சிந்தியுங்கள்.பெண்களை தனிமைபடுத்தி அவர்களின் குடும்பவாழ்க்கையின் தொலைக்க நிங்களும் காரணமாக இருந்துவிடாதிர்கள்.ஆதாரியுங்கள்.இன்றைய சமுதாயத்தில் பெண்களின் வளர்ச்சி தடுக்ககூடிய காரணிகளை கண்டறிந்து அவற்றை நீக்க முயற்ச்சியுங்கள்.
தொகுப்பு:தமிழ் அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி

No comments:

Post a Comment