அன்பான தமிழ் தோழிகளே இனிய வணக்கம்
பெண்ணாக பிறந்து இவ்வுலகில் தன் வாழ்க்கையை வாழ்ந்து நிறைவடைய செய்வதற்குள எத்தனை மாற்றங்கள் நம் பெண்கள் வாழ்க்கையில்.இன்றைய கால நம் இளம்பெண் தோழிகள் தங்கள் வாழக்கையை தேர்தெடுப்பதில் தங்களில் முழுவிருப்பமற்ற ஒரு மனநிலையுடன் வாழ்ந்துவருகின்றனர்.
தோழிகளே நம்மில் பலர் நல்லதொரு மனநிலை மற்றும் படிப்பறிவு பெற்றிருந்தும் தங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற துனைவர் அமைக்கலாம் என்ற மனநிலையுடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு விருப்பமற்ற திருமண வாழ்க்கையில் அடியேடுத்தும் வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதே போன்று காதல் திருமணங்களிலும் நம் தோழிகள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டு வாழ்க்கையை தொலைத்துவிடுகிறோம்.
வளர்ந்து வரும் உலகில் பெண்களின் வாழ்க்கை என்பது ஒரு சாதரான ஒன்றாக சென்றுவிட்டது.நம் பெண்களின் வருங்கால வாழ்க்கை துணைவர் நம்மை பற்றி புரிந்து கொள்ள கூடிய வகையிலும் அவருடைய பழக்கங்களையும் அவரை பற்றி முழுவிபரங்களையும் அறியாமால் இன்றைய கால திருமணங்களை நடைபெருகிறது.இதில் குறிப்பிடும் தகவல் என்னவென்றால் எதிர்கால குடும்ப வாழ்க்கையில் பெண்களை பாதுகாக்ககூடிய திட்டங்கள் வகுப்பது கிடையாது இன்றைய கால திருமணங்கள்.