என் இனிய அன்பான தோழிகளே
காதல் என்பது ஒரு ஆண் மனமும் ஒரு பெண் மனமும் ஒருவரை ஒருவர் மனதளவில் புரிந்து கொண்டு சாதி மதம் கருத்து வேறுபாடுயின்றி இருவரும் தாங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்வதே காதல் என பொருள்படும்.அத்தகைய காதலில் நம் இளம் தோழிகள் நல்லொதொரு வாழ்க்கை என நம்பி தங்கள் வாழ்க்கையை பறி கொடுக்கும் நிலை இன்றைய சமுதாயத்தில் அறங்கேறி வருகிறது.இதன் காரணம் எங்கு தோன்றுகிறது என்று பார்த்தால் நம் தோழிகள் தான் பழகும் காதல் நண்பரின் முழ
விபரங்களை பற்றி அறியமால் தங்கள் மனதையும் வாழ்க்கையும் பறிகொடுக்கும் அவல நிலை நடைபெறுவதை நம் அன்றாட நிகழ்வுகளின் முலம் காண கூடியாதாக உள்ளது.இவற்றில் நம் காதல் மற்றும் விரும்பிய வாழ்கை துணைவரை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் நம் தோழிகளின் நலனுக்காக
1.நம் மனம் விரும்பிய தோழன் நல்லதொரு படிப்பினையும்.நிரந்தர வேலை வாய்ப்பினையும் பெற்றுள்ளரா.
2.எச்செயல்பாடுகளையும் எளிதில் புரிந்து கொண்டு நடப்பவராக இருக்க வேண்டும்.
3.ஒரு செயலில் தவறுகள் ஏற்படும் பொழுது அவற்றை விட்டு கொடுக்கும் தாராள மனம் படைப்பவராக இருக்க வேண்டும்.
4.இன்றை சமுதாயத்தின் சிரழிவு பழக்கங்களான மது.புகைபிடித்தல் மற்றும் ஏனைய தீய பழக்கங்களுக்கு அடிமைபட்டுள்ளவரா என கண்டறிய வேண்டும்.
5.பொருளாதாரத்தில் உயர்தவனாக இருந்தால் அவரின் பின்னனி நடைமுறை பழக்கங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
6.நம் அன்பு உறவினர்களின் மீது பாசம் பற்றும் வைக்ககூடிய மனம் உள்ளவர என கண்டறிய வேண்டும்.
7.எனக்கு நி உனக்கு நான் என்னும் பாச சொல் மொழிகளுக்கு ஏற்றவாறு வாழ்க்கையின் இறுதி வரை நம்மிடம் சிறந்தவராக இருப்பவர என கண்டறிய வேண்டும்.
8.பொருளாதாரத்தில் பின்தங்கியவனாக இருந்தால் அத்தோழர்களின் அன்றாட நடைமுறை பழக்கங்களை கண்டறிய வேண்டும்.
9.உடல் ரீதியான மாற்றங்கள் மற்றும் பாதிப்பு உடையவராக இருப்பவரா என கண்டறிய வேண்டும்.
10.நம் அன்பு தோழிரின் உன்மையாண இருப்பிட மற்றும் அவரின் குடும்பத்தார் பற்றிய முழ விபரங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
11.பாலிய ரீதியான உணர்ச்சிவசபட கூடியவரா என நம் பழக்கத்தின் போது கண்டறிய வேண்டும்.இவற்றில் மிக கவனமாக தோழிகள் செயல்பட வேண்டும் தவறுகள் நம்மை அறிந்தும் அறியமாலும் நடக்க வாய்ப்புகள் உள்ளன.
12.பணம் மற்றும் ஏனைய பொருளாதாரத்தில் நாம் இருந்தால் காதல் தோழரின் எதிர்பார்ப்புகளை அவருக்கு தெரியாமல் கண்டறிந்து கொள்ள வேண்டும்.
13.இருவரும் தங்களை புரிந்து கொண்டு விட்டால் தங்கள் காதல் பாசத்தை வீட்டில் மறைக்காமல் தெரியபடுத்த வேண்டும்.
14.மேற்கண்ட வழிமுறைகளில் நம் தோழன் தகுதியில்லை என்றால் விலகி விட வேண்டும்.மீறினால் அவதியுருவது நாம் தான்.
15.அன்பு தோழரின் வயதினை தெரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றையேல்லாம் நம் கண்டறிந்து விழிப்புணர்வு அடைந்தால் நம் வாழ்கை ஒரு நல்ல வசந்த காலமாக மாற்றி அமைத்து கொள்ளலாம்.
தொகுப்பு:தமிழ் அன்னை தமிழ் பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி
No comments:
Post a Comment