தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

Sunday, 12 July 2015

தன்னம்பிக்கை பெண்குலத்தின் உயர்வு விழிப்புணர்வு தொகுப்பு

அன்பான தோழிகளே 
 பெண்ணாக பிறந்தால் உலகம் அறிய செய்ய வேண்டும் பெண்மையின் மகத்துவத்தை.அதே போன்று துள்ளி ஒடும் இளம் மானை போன்று நம்முடைய வாழ்க்கை செயல்பாடுகளில் துடிப்புடன் தன்னம்பிக்கையுடன் இவு்வுலகில் களம் இறங்க வேண்டும்.சரித்திரங்கள் நிகழ்ந்திட சாதனை பெண்ணாக மாற வேண்டும் இச்சமுதாயத்தில்.

தோழிகளே நமக்கா இறைவன் அளித்து முதல் சொத்து நம்முடைய அன்னை மற்றும் தந்தைக்கு அடுத்த சொத்து தன்னம்பிக்கை.கல்வி இந்த சொத்துகளை ஒரு பெண் சிறப்புற பயன்படுத்தினாலே வாழ்க்கையின் வெற்றிக்கோட்டையை அடைந்து விடலாம்.இப்பபூமியில் பெண்ணாக பிறந்த நம் வாழ்க்கையில் நமக்கு நடைபெறும் செயல்பாடு்களை கண்டு மனம் களரது அவற்றை எதிர்த்து நிற்கும் பெண்ணாக மாற வேண்டும்.பொறுமை.அடக்கம் கடமை.நேர்மை.போன்ற வாழ்க்கையின் முக்கிய அம்ச நெறிகளை பின்பற்றினாலே போதும் வெற்றி பெண்ணாக வாழ்ந்து காட்டலாம்.பெண்களுக்கு எற்படும் தவறுகளை சுட்டிகாட்டும் இச்சமுதாயத்தில் நாம் அவற்றை திருத்தங்கள் செய்யக்கூடிய தன்னம்பிக்கை பெண்ணாக மாற வேண்டும்.

தோழிகளே இன்றைய நவின காலத்தில் நம் பெண் தோழிகள் தன்னம்பிக்கையற்ற மனநிலையுடன் இருப்பது பெரும் வேதனைக்குரிய ஒன்று.இது நம் பெண்குலத்தில் தற்சமயம் நிலவி வருகிறது.ஆண் தோழர்களுக்கு நிகரான முன்னேற்ற பாதையில் நம் பெண் சமுதாயம் சென்றாலும் ஒரு சில பெண்கள் நம் முன்னேற்ற வழிமுறைகளில் நம்பிக்கையற்ற பெண்ணாக முடக்கியுள்ளனர்.தோழிகளே நம்முடைய வாழ்க்கையில் நாம் பொருளாதர சூழ்நிலைகளில் உயர்ந்தோ.அல்லது தாழ்ந்தோ இருந்தாலும் அவற்றை நினைத்து நாம் நம்முடைய விடாமுயற்ச்சி தன்னம்பிக்கையை விட்டுவிடக்கூடாது.எச்சூழ்நிலையிலும் ஒரு வீபரீத செயல்பாடுகளில் இருந்து நமக்கு நாமே ஆறுதல் அடைந்து கொள்ள கூடிய தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்.

தோழிகளே இன்றைய கால உலகில் நமக்கு உறுதுணையாக நம் முன்னேற்றத்திற்கு உதவ கூடிய ஒரு சில ஆண்களும் இருக்கும் இச்சமுதாயத்தில் நம்முடைய செயல்பாடுகளின் முலம் அவர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.தோழிகளே தன்னம்பிக்கை என்பது நமது படிப்பு.வேலை.மற்றும் வாழ்க்கையிலும் முயற்ச்சியுடன் கடைபிடிக்க வேண்டும்
தன்னம்பிக்கைகுரிய யோசனைகள் ஒரு சில 
1.உலகின் சிறந்த கவிஞர்களின் தன்னம்பிக்கை கட்டுரை புத்தகங்களை படிக்கலாம்.
2.என்னால் சாதிக்க முடியும் என்ற கொள்கையுடன் ஒவ்வொரு செயல்களில் மன உறுதியுடன் இருக்க கூடிய மனநிலையை வளர்த்து கொள்ளுங்கள்.
3.இருமாப்பு (பிடிவாதம்) கோபம் மற்றும் சில தவறனா செயல்பாடுகளை விட்டொழித்து பொறுமை அமைதி.மகிழ்ச்சியுடன் கூடிய சகோதர மனநிலையுட்ன இருக்க முயற்ச்சி செய்யுங்கள்.
4.தன்னம்பிக்கை தரக்கூடிய நற்செயல்பாடுகளை நடைமுறை உலகில் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
5.குடும்ப பாசம்.ஒற்றுமை.உதவிபுரிதல்.போன்றவற்றின் முலம் தன்னம்பிக்கை பெறலாம்.

தோழிகளே இருளில் இருந்து தவிக்கும் பெண்ணாக இருந்தாலும் தன்னம்பிக்கை என்னும் அகல் ஒளி விளக்கேற்றினாலே பறந்துபோகும் கோழைதன்மை இருள்.வெற்றி நிச்சயம் நம் பெண்குலத்திற்கு தன்னம்பிக்கையுடன் இருப்போம்.
தொகுப்பு தமிழ் அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி 
   

No comments:

Post a Comment