தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

Wednesday, 17 June 2015

நம்மால் முடியும் பெண்ணே -சாதனை விழிப்புணர்வு தொகுப்பு

அன்பான தமிழ் தோழிகளே 

மங்கையராக இவ்வுலகில் பிறந்திட நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பதற்கு ஏற்றார் போன்று இன்றைய நவின கால உலகில் அனைத்து துறைகளிலும் ஆண் தோழர்களுக்கு இணையாக வளர்ச்சியடைந்து வருகிறது.இன்னும் குறிப்பிடும்படி சொன்னால் ஆண்களை விட ஒரு மடங்கு முன்னேறி செல்லுக்கூடிய அளவிற்கு நமது பெண் சமுதாயம் வளர்ச்சியடைந்து வருகிறது.ஆதிகாலத்தில் தான் நம் பெண்குலம் வீடுகளில் முடக்கப்பட்டு அவர்களின் சாதனைகளையும் உணர்வுகளையும் வெளிபடுத்த முடியாமல் போனது.இன்றைய கால சுதந்திரம் அன்றைய கால பெண்களுக்கு இருந்திருக்கும் பட்சத்தில் இன்னும் எத்தனையோ சாதனையளார்களையும்.அறிஞர்களையும் நாம் பெற்றிருக்கலாம்.மேலும் அடிமை என்னும் கோட்பாடு அழிக்கப்பட்டு இருக்கும்.தோழிகளே இவ்வுலகில் பிறவி பெருங்கடலை கடப்பது என்பது எளிதான ஒன்று அல்ல.இத்தகைய பிறவியை நம்முடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிபடுத்த சமுதாயத்தில் தனி சாதனை பெண்ணாக திகழ்ந்திட வேண்டும்.

தோழிகளே நம்மால் முடியும் எண்ணும் கொள்கைப்பாட்டுடன் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தங்களின் முயற்ச்சிகளை தொடங்குங்கள்.கோழைதன்மை என்பது நம்மிடையே புகுந்துவிட்டால் நம்முடைய வெற்றியின் சுவடுகள் இல்லாமல் சென்றுவிடும்.குடும்ப பொறுப்புகள் என்பது நம் பெண்குலத்திற்கு முக்கியமான ஒன்றாகும்.தோழிகளே சாதனை என்பது நாம் வேலை செய்யக்கூடிய துறைகளில் சாதித்து காட்ட வேண்டும் என்பது மட்டும் அல்ல .நம்முடைய குடும்ப பொறுப்புகளையும் நல்லதொரு முறையில் நம்முடைய வாழ்க்கையின் இறுதி வரையிலும் எவ்வித மாற்றங்கள் இன்றி சிறப்பான வாழ்க்கையினை வாழந்தாலே மிகப்பெரிய சாதனையாகும்.தோழிகளே உணர வேண்டும் இன்றைய காலத்தில் நல்லதொரு வளர்ச்சிகரமான சூழ்நிலைகள் நம் பெண்குலத்திற்கு அமையப்பெற்றுள்ளது.அத்தகைய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.பெண் ஆக பட்டவல் எதையும் புரிந்து கொண்டு அவற்றை நல்லதொரு நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய அணுகுமுறைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.தோழிகளே நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு விதங்களில் நம்மை அச்சுறுத்த கூடிய நிகழ்வுகள் நடைபெறும்.அவற்றை கண்டு நாம் அஞ்சி ஒதுங்கி விட்டால் நம்முடைய முயற்ச்சிகள் என்பது இச்சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட ஒன்றாக சென்றுவிடும்.சாதனை பெண்களும் இத்தகைய சமுதாய சூழ்நிலைகளையும் கடந்துதான் தங்களின் சாதனை வெற்றியை இச்சமுதாயத்தில் நிலைநாட்டியுள்ளனர்.

தோழிகளே நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் சாதனை என்னும் கோட்பாட்டில்தான் இருக்க வேண்டும் .நாம் சாதனை என்னும் அகல்விளக்கினை இச்சமுதாயத்தில் ஏற்றி வைத்தால் தான் நமக்கு பின்பு வரும் நம் பெண்களும் எளிதாக அத்தகைய வாய்ப்பினை பெற முடியும்.இது நம் பெண்குலத்தை இச்சமுதாயத்தில் தனியாக பிரதிபலிக்க செய்யும்.மேலும் நம் குலத்திற்கு ஏற்படும் அவசெயல்பாடுகளும் அறவே அழிக்கப்படும்.பெண்களின் மீதான மதிப்பும் கூடும்.குடும்பத்தில் பல்வேறு வகைளில் ஏற்படும் மனகசப்பு நிகழ்வுகள் இருந்தாலும் அவற்றை நினைத்து ஒரு சக்தியற்ற பெண்ணாக முலையில் ஒதுங்கி இருந்திட கூடாது.அவற்றை முறியடித்து புத்துணர்ச்சியுடன் குடும்பத்தின் சாதனை பெண்ணாக இருக்க முயற்ச்சிக்க வேண்டும்.வாழ்க்கையில் நடைபெறும் சிறு மனபிரிவுகள்.இறப்பு போன்றவை மட்டும் நம்மை அமைதிபடுத்திட முடியாது.அது நம்மை நாமே ஏமாற்றி கொள்வதற்கு சமம்.தோழிகளே மனதினை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் மேலும் தற்சமயம் காலங்களில் நிலவும் சூழ்நிலை மாற்றங்களை பற்றிய அணுகுமுறை கருத்துகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்ணாக பிறந்தால் அனைத்து தரப்பு பொறுப்புகளையும் வழிநடத்தி செல்ல வேண்டும் என்பது இன்றைய சமுதாயம் நமக்கு அளித்திருக்கும் செயல்பாடுகளில் ஒன்றாகும்.இதில் நமக்கு ஏற்படும் பின்னடைவு என்பது ஏரளாம்.ஒரு குடும்பத்தில் பிறக்கும் பெண் மிக எளிமையானவராகவோ அல்லது வசதியானவராகவோ இருப்பது பெரியது ஒன்று நம்மை மேன்மையடைய செய்யாது.வாழ்க்கையின் பிற்பகுதியில் தன் குடும்பத்தில் சிறப்பான நிலையினை அடைந்து காலம் போற்றக்கூடிய வகையில் சாதனை செய்வதே ஆகும்.சாதனை புரிவதற்கு பொருளாதரம் மற்றும் பொறுப்புகள் என்பது தடைகள் காரணம் கிடையாது.தோழிகளே சாதனை என்னும் இமயத்தை அடைந்திட நாம் மன அமைதி.அன்பு.பொறுமை.நல்ல சிந்தனை.எளிமையான செயல்பாடுகள்.விடமுயற்ச்சி.இரக்கம்.சகிப்பு தன்மை.மனகட்டுபாடு போன்ற கொள்கைகளை கடைபிடித்தால் சாதனை இமயத்தை தொட்டுவிடலாம்.குடும்பத்தை கோயிலகாவும்.அதில் அங்கம் வகிக்கும் அனைவரையும் தெய்வங்களாக நினைத்தலே போதும்.

தோழிகளே ஆயிரம் குற்றங்கள் நம்மீது சுமத்தபட்டலும் நமது நேர்மையான வாழ்க்கை மற்றும் செயல்பாடுகள் வழிநடத்தி சென்றாலே குற்றங்கள்  சுமத்திட வழியில்லாது சென்று விடும்.தோழிகளே வாழ்கையில் நாம் அனைவரும் உறுதி மொழி ஒன்றை மேற்கொள்ள வேண்டும் சாதனை பெண்ணாக குடும்பத்திலும் சமுதாயத்திலும் திகழ்ந்திட வேண்டும் என்று.மகிழ்ச்சியான மனமே நம்மை மேன்மேலும் நல்ல செயல்பாடுகளை செய்ய வைக்கும் சக்தி ஆகும்.ஒரு குடும்பத்திற்கு சென்று ஒளிவிளக்கை ஏற்றுவது அல்லாது அந்த விளக்கில் ஒளிரும் ஜொதியாக அக்குடும்பத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய பெண்ணாக திகழ்ந்திட வேண்டும்.சாதனை வெற்றிகளையும் நாமும் அடையலாம் ஆண்களுக்கு மட்டும் ஒன்றானது கிடையாது.சாதிப்போம் குடும்பத்திலும் நாம் வேலை செய்யும் துறைகளிலும்.இது நம் எதிர்கால பெண்களின் நல்லதொரு வளர்ச்சிக்கு நம் இட்டு செல்லும் அடிதளம் தோழிகளே.சாதனை வெற்றியை நமது பெற்றவர்களின் பாதங்களில் சமர்பணம் செய்வோம்.முயற்ச்சி செய் பெண்ணே வாழ்வின் இறுதி முச்சு வரையிலும் வெற்றி நிச்சயம்.
தொகுப்பு:தமிழ் அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி   

No comments:

Post a Comment